×

வாட்ஸ் அப்பில் குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு புதுவையில் மாயமான உதவி தலைமை ஆசிரியர் மீட்பு

புதுச்சேரி, ஜூலை 19: விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா, பெரிய கோட்டக்குப்பத்தைச் சேர்ந்தவர் திருமால் (60), லோடு கேரியர் டிரைவர். இவரது மகன் விமல்ராஜ் (37). இவர் புதுச்சேரி, முத்திரையர்பாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக உள்ளார். இவருக்கு 6 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி திவ்யா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். சமீபகாலமாக தம்பதியிடையே அடிக்கடி குடும்ப சண்டை ஏற்பட்டு மனஉளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த 16ம்தேதி முத்திரையர்பாளையம் வீட்டில் இருந்து பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் அதன்பிறகு வீடு திரும்பவில்லையாம்.

இதையடுத்து விமல்ராஜை அவரது மனைவி மற்றும் தந்தை ஆகியோர் பலஇடங்களில் தேடி அலைந்தனர். இந்த நிலையில் மறுநாள் திருமாலின் மகளுக்கும், உறவினர்களுக்கும் விமல்ராஜிடம் இருந்து வாட்ஸ்அப் மெசேஜ் வந்துள்ளது. அதில்நான் வீட்டைவிட்டு செல்கிறேன்… என்னை தேடவேண்டாம்… என்ற குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். இதையடுத்து அவரது பள்ளி முதல்வரிடம் தகவலை கூறி அங்குள்ள சிசிடிவி கேமராவை பார்த்தபோது அவர் சம்பவத்தன்று இரவு 8.30 மணியளவில் வந்து அவரது அறைக்கு சென்று தேவையான பொருட்களை எடுத்துச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த திருமால், தனது மகனை காணவில்லை என மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் திருமால் நேற்று முன்தினம் புகார் அளித்தார். அதன்பேரில் எஸ்ஐ கலையரசன் தலைமையிலான போலீசார் மிஸ்சிங் பிரிவின்கீழ் வழக்குபதிந்து மாயமான உதவி தலைமை ஆசிரியரை மீட்கும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளனர். இதனிடையே சேலத்தில் உறவினர் வீட்டில் அவர் இருப்பதாக தகவல் கிடைக்கவே, அவரை மீட்டு புதுச்சேரி அழைத்துவரும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

The post வாட்ஸ் அப்பில் குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு புதுவையில் மாயமான உதவி தலைமை ஆசிரியர் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Puduvai ,Puducherry ,Thirumal ,Periya Kotakuppam, Villupuram district ,Vanur taluk.… ,
× RELATED வெயில் படுத்தும் பாடு… ஏடிஎம் ஏசி அறையில் தூங்கிய போதை ஆசாமி